tamilnadu

ஸ்ரீநகரில் 14.1% ஓட்டு பதிவானது

ஸ்ரீநகர், ஏப். 19- ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் பாரமுல்லா, ஜம்மு ஆகிய இரண்டு தொகுதி களுக்கு கடந்த 11-ந்தேதி வாக்குப் பதிவு நடந்தது. 2-வது கட்டமாக ஸ்ரீநகர், உதம்பூர் ஆகிய 2 தொகுதியில் ஏப்ரல் 18 வியாழனன்று ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீதமே ஓட்டு பதிவாகி இருந்தது. நாடு முழுவதும் 95 தொகுதிகளுக்கு வியாழ னன்று 2-வது கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஸ்ரீநகரில் தான் மிகவும் குறைவான வாக்கு பதிவாகி இருந்தது. ஆனால் உதம்பூர் தொகுதியில் 70.2 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. காஷ்மீரில் 2-வதுகட்ட தேர்தலில் மொத்தம்45.7 (இரண்டு தொகுதியி லும் சேர்த்து) ஓட்டுப்பதி வானதாக மாநில தலைமைதேர்தல் அதிகாரி தெரி வித்தார். மேற்குவங்க மாநிலம் ஐல்பைகுரி தொகுதியில்தான் அதிகபட்சமாக 82.26 சதவீத ஓட்டுப் பதிவானது.

;